search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருளாதாரத்தில் நலிந்தவர்கள்"

    பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணையை 28-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. #SC #10pcreservation #economicalweakersection
    புதுடெல்லி:

    பொதுப் பிரிவினரில் பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் உள்ளவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் (இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103-வது திருத்தத்தின் மூலம்) பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதிய மசோதா நிறைவேறியது.

    மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சமத்துவத்துக்கான இளைஞர்கள் (Youth for Equality) என்ற அமைப்பின் சார்பில் கடந்த ஜனவரி மாதம் பத்தாம் தேதி  பொதுநல வழக்கு தொடரப்பட்டது.  

    இதுதவிர காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் டெஹ்சீன் பூனாவால்லா மற்றும் வேறு சில தொண்டு நிறுவனங்களும் இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த 10 சதவீதம் ஒதுக்கீட்டையும் சேர்த்தால் மொத்த இட ஒதுக்கீடு 60 சதவீதமாக உயர்ந்து விடும். 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு இருக்க கூடாது என்னும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இது பாதகமாக அமைந்து விடும் என மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர். இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.



    முன்னர் நடந்த விசாரணையின்போது 10 சதவீதம் ஒதுக்கீட்டுக்கு தடை விதிக்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்டோரை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று மீண்டும் விசாரணையை தொடங்கியது.

    இவ்வழக்கின் விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்னும் மனுதாரரின் புதிய கோரிக்கை தொடர்பாக வரும் 28-ம் தேதி பரிசீலிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் மறுவிசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தனர். #SC #10pcreservation #economicalweakersection
    ×